உள்ளூர் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ

செங்கோட்டை மேக்கரையில் மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ- தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Published On 2022-03-15 09:23 GMT   |   Update On 2022-03-15 09:23 GMT
கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகரை முதல் கடையநல்லூர் வரையிலான மலைப்பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. மேக்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயால் தாவரங்கள் கருகி வருகிறது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மூலிகை செடிகள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் உள்ளன.

இங்கு கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகரை முதல் கடையநல்லூர் வரையிலான மலைப்பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. மேக்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயால் தாவரங்கள் கருகி வருகிறது. மேலும் காட்டில் வாழும் யானை, மான், மிளா, காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வரும் இந்த மலைபகுதியில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

இந்த மாலையடி வாரத்தையொட்டி தனியாருக்கு சொந்தமான இடங்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மா, பலா, அண்டி, வாழை போன்றவை பயிரிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் இரவு பகலாக முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினருடன் இணைந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள், தன்னார்வலர்களும் ஈடுபடலாம் என வனசரகர் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று 2-வது நாளாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் 89404 47337 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் லிங்கில் தொடர்பு கொள்ளுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News