உள்ளூர் செய்திகள்
பந்தயம் நடைபெற்ற போது எடுத்த படம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

Published On 2022-03-15 11:47 IST   |   Update On 2022-03-15 11:47:00 IST
கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் ஸ்ரீ வீரகாளிய ம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு, மாஞ்சன்விடுதி மற்றும் கொத்தக்கோட்டை ஊராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி, மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மழவராயன்ப ட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜோதி மழவராயார் மற்றும் ஆலங்குடி கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விழாவில்  நகரச்செயலாளர் பழனிவேல், ஒன்றியசெயலாளர் பெரியசாமி முன்னாள் கூட்டுறவு சங்கம் தலைவர் நேசராசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வம்பன் கோவில் வாசலிலிருந்து  இருந்து தொடங்கிய பந்தயம் திருவரங்குளம் கேப்பரை சென்று மீண்டும் வம்பனை வந்தடைய சுமார் 10 கிலோ மீட்டர் வரை எல்கை பந்தையம் வைக்கப்பட்டிருந்தது.

வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 50,000, முதல் 1 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி சிவகங்கை, மதுரை , காரைக்குடி, விருது நகர், மற்றும் பல்வே று பகுதிகளில் இருந்து 50 க்கும் அதிகமான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகள் களத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் ஒன்றிய மாணவரணி அழகர், கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் அயுப்கான், முருகானந்தம் பழனிவேல் அரங்கன் கவுன்சிலர் சுபசெந்தில் பாஸ்கர் கண்ணன், கைலாசம், பொற்பனையான்,  தர்மலிங்கம், இரு ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News