உள்ளூர் செய்திகள்
தமிழக அரசு

5 மாவட்டங்களில், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்- தமிழக அரசு உத்தரவு

Published On 2022-03-15 10:46 IST   |   Update On 2022-03-15 10:58:00 IST
சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன.

சென்னை:

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதைசெயல்படுத்தும் வகையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன.

மாவட்ட கலெக்டர்கள் அலுவலக கட்டிடத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையினர் நல விடுதிகள் மாவட்ட சிறு பான்மையினர் அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து மாவட்டங்களில் புதிதாக மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகங்கள் தோற்றுவித்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, சிறுபான்மையினர் நல இயக்குனர் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்திரவிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் 3 வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

Similar News