உள்ளூர் செய்திகள்
நல்லராலபள்ளி கிராமத்தில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

தொழிற்சாலைகளை அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது

Published On 2022-03-14 16:03 IST   |   Update On 2022-03-14 16:03:00 IST
தொழிற்சாலைகளை அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஓசூர், 

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி, உத்தனபள்ளி, அயர்ன பள்ளி உள்ளிட்ட  3 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், மக்களை நேரில் சந்தித்து  குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட உத்தனப்பள்ளி, அளேசீபம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் நான்காவது சிப்காட் அமைக்க அரசு, நிலம் கையகப்படுத்தி வரும் நிலையில், தங்களது விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்க அரசு முன்வரவேண்டும்.

விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதை,  கைவிட்டு, மேட்டுப்பகுதிகளில் மட்டுமே தொழிற்சாலைகள் அமைக்க, அரசு முன் வர வேண்டும். எந்த சூழ்நிலையிலும், விவசாய நிலங்களை கையகப்படுத்த, அரசு முன்வரக்கூடாது.

 இவ்வாறு அவர் கூறினார். 

Similar News