உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2022-03-14 16:01 IST   |   Update On 2022-03-14 16:01:00 IST
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.அள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 34). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் ஊத்தங்கரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் காளிதாஸ், கிருஷ்ணகிரி அணைக்கு வந்த அவர், அணையில் இறங்கி குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கி பலியானார். 

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசுக்கும்,தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, நீரில் மூழ்கி பலியான காளிதாசின் உடலை மீட்டனர்.

இதைத் தொடர்ந்து உடலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நீரில் மூழ்கி பலியான காளி தாசிற்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

Similar News