உள்ளூர் செய்திகள்
.

வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-03-14 15:55 IST   |   Update On 2022-03-14 15:55:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள சவுட்ட அள்ளி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது32). இவர் கடந்த 12&ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளில் மலையாண்டஅள்ளி பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தர்மனை  வழிமறித்தனர். கத்தியை காட்டி அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தர்மன் காவேரிப்பட்டணம் போலீசில புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (19), காவேரிப்பட்டணத்தை சேர்ந்த தரணிதரன் ஆகியோர் சேர்ந்து தர்மனை வழிமறித்து மொபைல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் இரு வரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News