உள்ளூர் செய்திகள்
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலை யாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் லட்சு மிக்கும், அதே பகுதியை சேர்ந்த பசுபதி (30) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனால் மாரியப்பன், கூலி வேலைக்கு வௌ¤யே செல்லும் நேரங்களில் லட்சுமியும், பசுபதியும் உல்லாசமாக இருந்து வந்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்து வந்தாக கூறப் படு கிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் கள்ளக் காதலன் பசுபதிக்கும், லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த லட்சுமி, விஷம் குடித்து உயிருக்கு போராடினர். உடனே அவரை, பசுபதி மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் மத்தூர் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். அதில் தனது மனைவி லட்சுமியுடன் பசுபதி கள்ளத்தொடர்பு வைத்து தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் பசு பதியை நேற்று கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத் தில் வாலிபர் கைதான சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.