உள்ளூர் செய்திகள்
முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா
கறம்பக்குடி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சாலையில் உள்ள முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப் பட்டு கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் உள் ளிட்ட பல்வேறு பூஜைகள் நடை பெற்றது.
நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களைதலையில் சுமந்தப்படி கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் முருகன் கோவில் மூலஸ்தான விமான 5 கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கறம்பக்குடி பழனி பாதயாத்திரை குழு நிர்வாகி கள் செய்திருந்தனர்.கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.