உள்ளூர் செய்திகள்
சாலை பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
கந்தர்வகோட்டையில் தேரோடும் வீதி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சாமி திருக்கோவில் பங்குனி உத்திரதிருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேரோடும் வீதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நடை பெறும் திடல் ஜல்லி கற்கள் குவியலாக காட்சியளிக்கிறது.
இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சாலை பணிகளும் திடலில் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப் படாததால், திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
எனவே பணிகளை விரைந்து முடிக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.