உள்ளூர் செய்திகள்
பாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாராகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஞானவேல் (வயது 22). ஜெசிபி ஆபரேட்டர்.
இந்த நிலையில் நேற்று தாராகானூரில் இருந்து புலியூருக்கு ஞானவேல் , மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் திடீரென மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு காயமடைந்த ஞானவேலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு போச்சம் பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.