உள்ளூர் செய்திகள்
கைது

தியாகதுருகம் அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2022-03-13 17:26 IST   |   Update On 2022-03-13 17:26:00 IST
தியாகதுருகம் அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளகுறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்புதுரை (வயது 40) கொத்தனார்.

இவருடைய நிலத்தை இதே கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் (40) என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டதாக முன் விரோதம் உள்ளது. மேலும் இது சம்பந்தமாக சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று அருணாச்சலம், அன்புதுரை வீட்டிற்குசென்று வீட்டின் கதவை உடைத்து, அன்புதுரை அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயம் அடைந்த அன்புதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

Similar News