உள்ளூர் செய்திகள்
தீயில் எரிந்து சேதமான கோழி பண்ணையும், கருகிய கோழி குஞ்சுகளையும் படத்தில் காணலாம்

கோழி பண்ணைக்கு தீ வைப்பு-ரூ.3 லட்சம் சேதம்

Published On 2022-03-13 14:25 IST   |   Update On 2022-03-13 14:25:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நள்ளிரவில் கோழி பண்ணைக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பொம்மை பள்ளி காளி கவுண்டர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 40). இவர் தனது வீடு அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் சுமார் 3,500 கோழிக் குஞ்சுகளை வைத்து பராமரித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது . இதில் கோழி பண்ணையில் இருந்த 3500 கோழி குஞ்சுகள் தீயில் கருகி சாம்பல் ஆனது. 

மேலும் அங்கிருந்த தீவனப் பொருட்கள் தட்டு தளவாட சாமான்கள் அனைத்தும் சேதமானது.  இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செங்கோட்டு வேலவன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. கோழிப்பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமா? என்று மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நள்ளிரவில் கோழிப்பணியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News