உள்ளூர் செய்திகள்
முட்புதருக்கு தீ வைத்த மர்ம கும்பல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே முட்புதருக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் கோழி பண்ணைக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் முட்புதர்களுடன் அடர்ந்து இருந்துள்ளது.
இந்தநிலையில் அந்த பக்கம் செனற மர்ம நபர்கள் சிலர் அந்த வயலில் உள்ள முட்புதர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதையடுத்து தீ மளமளவென பரவி சுமார் 3 ஏக்கர் நிலமும் தீ பரவியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 ஏக்கரில் பரவியிருந்த நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீயால் இப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. 3 ஏக்கர் நிலம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீயால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.