உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

பீர் பாட்டிலுக்கு தனியாக ரூ.10 கேட்பதா? தட்டி கேட்ட குடிமகனுக்கு அடி- உதை: போலீசார் விசாரணை

Published On 2022-03-12 16:26 IST   |   Update On 2022-03-12 16:26:00 IST
பீர் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டதால் தட்டிக்கேட்ட குடிமகனை, டாஸ்மாக் ஊழியர்கள் அடித்து உதைத்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:

தமிழகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானங்கள் விலை கூடியது. இதனால் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் விலை கூடினாலும் பரவாயில்லை என்று குடிமகன்கள் தினமும் மது குடித்து வருவது சமூக ஆர்வலர்களை வேதனைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பீர் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டதால் தட்டிக்கேட்ட குடிமகனை, டாஸ்மாக் ஊழியர்கள் அடித்து உதைத்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி பஸ் நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஆசிரியர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவேல், பீர் வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் கூடுதலாத ரூ.10 கேட்டுள்ளனர்.

இதை கேட்டு மணி வேல்,அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே பீர் பாட்டில் விலை ரூ.40 வரை கூடியுள்ளது. இதில் உங்களுக்கு வேறு நான் தனியாக பணம் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் ஆவேசத்தில் மணிவேலை அடித்து உதைத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுபற்றி அவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து டாஸ்மாக் தற்காலிக பணியாளர்கள் கணபதி (வயது 48), பெருமாள்(47), ஆடலரசு(43), ஜெயராமன் (45), செல்வம் (45) ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News