உள்ளூர் செய்திகள்
சக்கரபாணி.

கயத்தாறு அருகே விபத்தில் கால்நடை மருத்துவமனை அலுவலர் பலி

Published On 2022-03-12 16:14 IST   |   Update On 2022-03-12 16:14:00 IST
கயத்தாறு அருகே நடந்த சாலை விபத்தில் கால்நடை மருத்துவமனை அலுவலர் சக்கரபாணி என்பவர் உயிரிழந்தார்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள திருமங்களகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி(வயது 45). 

இவர் வானரமுட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 1&ந்தேதி இரவு வானரமுட்டியில் இருந்து திருமங்களகுறிச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு இறந்தார்.  இதுதொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். 

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவையும் ஆய்வு செய்து வருகின்றனர். பலியான சக்கரபாணிக்கு கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்

Similar News