உள்ளூர் செய்திகள்
மாணவர்கள்

திட்டக்குடியில் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரிடம் மாணவர்கள் தகராறு

Published On 2022-03-12 16:12 IST   |   Update On 2022-03-12 16:12:00 IST
ராமநத்தத்தில் இருந்து ஏறிய மாணவர்கள் பஸ்சில் பயணிக்கும் போது மாணவிகளிடம் பிரச்சினை ஏற்படுத்தியதாவும், படிக்கட்டில் தொங்கியவாறு வருவதாக புகார் எழுந்தது.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பணிமனையில் இருந்து அரசு டவுன் பஸ் வழக்கம் போல் மங்களூர் சென்று விட்டு இன்று காலை திட்டக்குடி நோக்கி வந்தது அப்போது ராமநத்தத்தில் இருந்து ஏறிய மாணவர்கள் பஸ்சில் பயணிக்கும் போது மாணவிகளிடம் பிரச்சினை ஏற்படுத்தியதாவும், படிக்கட்டில் தொங்கியவாறு வருவதாக புகார் எழுந்தது. இதனை டிரைவர், கண்டக்டர் அவ்வாறு தொங்க கூடாது என எச்சரித்து பஸ் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆத்திரமடைந்த மாணவர்கள் தவறான வார்த்தைகளை உச்சரித்து டிரைவர், கண்டக்டரை திட்டினர். உடனே பஸ் டிரைவர் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு பஸ்சை நிறுத்தினார். தகவலறிந்து வந்த டிஎஸ்பி சிவா மாணவர்களிடம் இது போல் பேசக்கூடாது, பஸ் படிகட்டில் பயணிக்கக் கூடாது என எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News