உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆதிப்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடை பெறுவதுதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனடிப் படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மணமேல்குடி காவல்துறையினர்,
அங்கே இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த நான்கு நபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து லியாஸ்மீரான் (வயது20), சையதுமுகமதுபுகாரி (27), நியாஸ் (21), சிராஜுதீன் (27) ஆகிய நான்கு நபர்களை கைது செய்த காவல் துறையினர்,
அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வாளர் சாமு வேல்ஞானம் தலைமையில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கபட்டு பின்பு குற்ற வாளிகள் சிறையிலடைக்கப் பட்டனர்.