உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பணியாளர்கள் அறிமுக கூட்டம்

Published On 2022-03-12 14:56 IST   |   Update On 2022-03-12 14:56:00 IST
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பணியாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகபணியாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. 

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டு உறுப்பினர்களில் 13 நபர்கள் புதியவர்களும், 2-நபர்கள் முன்னாள் கவுன்சிலர்களும் என மக்களால் தேர்ந்ததெடுக் கப்பட்டு கடந்த (2-ந்தேதி) பதவி ஏற்றுகொண்டனர். 

இதில், 8-வது வார்டு உறுப்பினர் சரவணன் தலைவராகவும், 9&வது வார்டு உறுப்பினர் தமிழரசி சுந்தரமூர்த்தி துணை தலைவராகவும் (4&ந்தேதி) பொறுப்பேற்று கொண்டனர். இதனை அடுத்து, மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அறிமுக கூட்டம் (11-ந்தேதி) நடந்தது. 

கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைதலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். 

செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். வார்டு வாரியாக தேர்ந்தெடுக் கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பற்றி உறுப்பினர்களுக்குள் செயல் அலுவலர் அறிமுகம் செய்தார். 

பின்னர், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களை அறிமுகம் செய்தும், அவர்களின் பணி விவரம் குறித்தும் செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவித்தார். 

வார்டு கவுன்சிலர்கள் பலராமன், பாக்யராஜ், ஏழுமலை, மணி, சாந்தகுமாரி, கனகா, கவிதா, ஜீவா, தமிழ்குடிமகள், அஞ்சலை, மல்லிகா, அம்பிகா, இளநிலை உதவியாளர் தனமல்லி, வரி தண்டவர் பூபாலன், கணினி இயக்குனர் சுரேஷ், அலுவலக உதவியாளர் சுதா, தூய்மை காவலர்கள், மகளிர் குழு தூய்மைபணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். பேரூராட்சிக்குட்பட்ட 15 - வார்டுகளிலும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை, செயல் அலுவலர் உடன் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில், இளநிலை உதவியாளர் தனமல்லி நன்றி கூறினார்.

Similar News