உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைந்த பள்ளி கல்விதுறை சார்பாக கலைக்குழு கலைஞர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்விதுறை சார்பாக கலைக்குழு கலைஞர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகம்

Published On 2022-03-11 16:06 IST   |   Update On 2022-03-11 16:06:00 IST
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்ட அளவிலான கலைக்குழு கலைஞர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகங்களுக்கான பயிற்சி தரப்பட்டது.
கடலூர்:

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 - ன் படி ஏற்படுத்தப்பட்ட குழு பள்ளி மேலாண்மை குழு ஆகும்.

அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பள்ளி மேலாண்மைக்குழு வினை மறுசீரமைப்பு செய்யவும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்ட அளவிலான கலைக்குழு கலைஞர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகங்களுக்கான பயிற்சி தரப்பட்டது. இதில் 14 ஒன்றியத்துக்கான கலைக்குழுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

இதனை முதன்மை கல்வி அலுவலர் பூபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பாலகுருநாதன், செயலர் தாமோதரன் ஏற்பாடுகளை செய்தனர். மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் குணாளன் உடனிருந்தார். தொடர்ந்து 10 நாட்கள் இந்த நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும்.

Similar News