உள்ளூர் செய்திகள்
விபத்து

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி

Published On 2022-03-11 15:50 IST   |   Update On 2022-03-11 15:50:00 IST
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஜெகன் (வயது 20). இவரும் இவரது நண்பர் பூங்காவனம் மகன் ஹரி வயது 24 ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கெடார் கிராமத்தி லிருந்து ஒதியத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்த போது அவ்வழியே வேகமாக வந்துகொண் டிருந்த தனியார் ஆம்பு லன்ஸ் வேன் ஒன்று எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகன் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரி மற்றும் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் அப்துல்லா மற்றும் ஆம்புலன்சில் வந்த ராஜதுரை ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக இறந்து போனார்.

காயமடைந்த ஹரி, ராஜதுரை மற்றும் அப்துல்லா ஆகிய 3 பேரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஜெகன் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News