உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம்
கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 19). இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் நிவேதா கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நிவேதாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நிவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.