உள்ளூர் செய்திகள்
கேட்பாரற்று கிடந்த கோவில் உண்டியல்

கச்சிராயபாளையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த கோவில் உண்டியல்

Published On 2022-03-10 16:54 IST   |   Update On 2022-03-10 16:54:00 IST
கச்சிராயபாளையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த கோவில் உண்டியலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சிராயபாளையம் சின்னசேலம் சாலையில் காகித ஆலை உள்ளது. அதற்கு முன்பு உள்ள விவசாய நிலங்கள் உள்ளன. 

விவசாய நிலத்திற்கு இடையே உள்ள முட்புதரில் மரத்தால் செய்யப்பட்ட கோவில் உண்டியல் கேட்பாரற்று கீழே கிடந்தது அந்த வழியாக நேற்று விவசாய நிலத்திற்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உண்டில் எடுத்துச்சென்று விசாரணை செய்து வருகின்றனர். 

முதற்கட்ட தகவலில் ஏதோ கோவிலில் உள்ள உண்டியலை திருடி வந்து இங்கே உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை இங்கே போட்டு விட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிய வருகிறது இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News