உள்ளூர் செய்திகள்
மங்கலம்பேட்டை கூட்டுறவு மருந்தகத்தை மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் திடீர் ஆய்வு செய்தார்

மங்கலம்பேட்டை கூட்டுறவு மருந்தகத்தில் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு

Published On 2022-03-10 15:54 IST   |   Update On 2022-03-10 15:54:00 IST
ஏழை எளிய மக்கள், விலைவாசி உயர்விலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளின் விற்பனை விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கூட்டுறவு மருந்து கடையை கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விற்பனை விபரத்தை ஆய்வு செய்து பொது மக்களின் தேவைக்கேற்ப மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்ய விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் ஏழை எளிய மக்கள், விலைவாசி உயர்விலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளின் விற்பனை விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது. மருந்துகளை வாங்கும் நுகர்வோருக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்படுகிறது. வயதானவர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகிய வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யும் வசதி கூட்டுறவு மருந்தகங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என தெரிவித்தார். ஆய்வின்போது விருதாச்சலம் களஅலுவலர் சுரேஷ், சங்க செயலாளர் ஜெய்சன் உடனிருந்தார்.

Similar News