உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

பண்ருட்டியில் உயிர்பலி வாங்கும் சாலையை சீரமைக்க கோரி மறியல்

Published On 2022-03-10 15:38 IST   |   Update On 2022-03-10 15:38:00 IST
உயிர் பலி வாங்கும் மரண சாலையாக மாறியுள்ள பண்ருட்டி சென்னை சாலை,பண்ருட்டி கும்பகோணம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

பண்ருட்டி:

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசியநெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பணி கிடப்பில் கிடந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் மரண சாலையாக மாறியுள்ள பண்ருட்டி சென்னை சாலை,பண்ருட்டி கும்பகோணம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போக்குவரத்தை சீரமைத்தனர்.


Similar News