உள்ளூர் செய்திகள்
தேவிகாபுரத்தில் கோவில் திருவிழா நடக்க கோரி வீட்டு முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற வேண்டி வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிப்பட்ட பெண்கள்

Published On 2022-03-10 15:03 IST   |   Update On 2022-03-10 15:03:00 IST
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற வேண்டி பெண்கள் வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிப்பட்டனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரியநாயகி அம்மன் கனககிரி ஈஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி உத்திரப் பெருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடம் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் திருவிழாவை நடத்தி வந்தனர். 

இதில் மற்றொரு தரப்பினர் பெரியநாயகி அம்மன் பங்குனி உத்திர தேர் திருவிழாவை எங்களுக்கும் ஒருநாள் நடத்த அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு தேவிகாபுரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதை அடுத்து வழக்கம்போல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடத்தும் ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க நீதிபதி 2 வார காலம் அவகாசம் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் பெரியநாயகி அம்மன் கனககிரீசுவரர் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வழக்கம்போல் நடைபெற வேண்டி தேவிகாபுரத்தில் உள்ள பெண்கள் அவர்கள் வீட்டின் முன்பு வாழை இலையில் பச்சரிசி வைத்து 5 விளக்குகள் ஏற்றி தேர் திருவிழா நடைபெற வேண்டுமென்று பெரிய நாயகி அம்மனையும் கனககிரி ஈஸ்வரையும் வேண்டி விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Similar News