உள்ளூர் செய்திகள்
மேயர் மகேஷ் ஆய்வு

பார்வதிபுரம் பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது

Published On 2022-03-10 07:49 GMT   |   Update On 2022-03-10 07:49 GMT
பார்வதிபுரம் பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என மேயர் மகேஷ் எச்சரிக்கை
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதையடுத்து நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் சாலை வசதி,குடிநீர் வசதியை மேம்படுத்தவும் மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. 

இதையடுத்து மேயர் மகேஷ் பார்வதிபுரம் பாலத்தின் கீழே திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது போக்குவரத்துக்கு இடை யூறாக மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். 

இதையடுத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தவர்கள் அங்கு இருந்த இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள். இருசக்கர வாகனங்களை இதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார்.

மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News