உள்ளூர் செய்திகள்
ஆண்கள் கைப்பந்து போட்டி

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி

Published On 2022-03-10 07:43 GMT   |   Update On 2022-03-10 07:43 GMT
சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி நடந்தது.
கன்னியாகுமரி:

சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி தொடங்கியது.

இப்போட்டியின் தொடக்க விழா கல்லூரி அரங் கில் வைத்து நடை பெற்றது. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எ.பி. சீலன் வவேற்று பேசினார். தக்கலை மறை மாவட்ட ஆயரும் கல்லூரி தலைவருமான ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந் திரன் தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், விளையாட்டு வீரர்களின் மனமும் உடலும் நலமாக இருக்கும். காரணம் விளையாட்டு அவர்களது சிந்தனையை இலக்கைச் சிறந்த முறையில் வடி வமைக்கும். அந்த வகை யில் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

தொடக்கவுரை ஆற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் கைப்பந்து போட்டி ஒருங்கிணைப் பாளர் முனைவர் கந்தசாமி “உடல் மன நலமிக்க மாணவர்களே இந்தச் சமூகத்திற்குத் தேவை” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய கல்லூரி தாளாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் “விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சமூகத்திற்கும் சிறப் பினைப் பெற்றுத் தருகிறவர்களாக இருக்கிறார்கள்.

வழி நடத்துவதில் பயிற்சி யளிப்பதில் உடற்கல்வி இயக்குனர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தங்கள் குடும்பத்தை மறந்து அவர்களுடன் செலவளிக்க வேண்டிய நேரத்தை எல்லாம் விளையாட்டு வீரர்களான உங்களுடன் செலவளிக்கின்றனர். 

அந்த வகையில் அவர்களது தியாகம் போற்றுதலுக்குரியது. உடற்கல்வி இயக்குனர்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன்” என்று பேசினார். இப்போட்டியில் பல்கலைக்கழக அளவிலான பதினாறு அணிகள் கலந்து கொண்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ராஜேஷ் பெ.செ. நன்றி கூறினார்.
Tags:    

Similar News