உள்ளூர் செய்திகள்
கூரை வீடு தீ பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.

மங்கலம்பேட்டை அருகே தீப்பிடித்து கூரை வீடு எரிந்து நாசம்

Published On 2022-03-09 16:10 IST   |   Update On 2022-03-09 16:10:00 IST
மங்கலம்பேட்டை அருகே தீப்பிடித்து கூரை வீடு எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் நெறிஞ்சிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 45).

இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, அரங்கூர், காமராஜ் தெருவை சேர்ந்த பிரகாஷ் (22) என்பவர் குடியிருந்து, வீடு கட்டும் வேலையை கவனித்து வந்தார்.

நேற்று இரவு 8 மணி அளவில் அவரது வீட்டில் பிரகாஷ் மனைவி திவ்யா, அவரது குழந்தை உள்பட யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

இதில், பிரகாஷ் வீட்டில் இருந்த ரொக்கப் பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து, தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீரங்கம், முகமது புன்யாமின், கார்த்திக் ராஜா, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News