உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி காவல் நிலையத்தில் உலகமகளிர் தின விழா
ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
ஆலங்குடி, மார்ச்.9-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமை தாங்கினார். விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வெங்கடேஷ் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்நிலைத்தில் உள்ள மகளிர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருவரையொருவர் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர். மேலும் காவல் நிலையம் சென்று இருந்த பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி காவல் நிலையத்தில் பெண் காவலர்களை சிறப்பிக்கும் வகையில் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும், கேக் வெட்டியும், பெண் காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.