உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி மேஸ்திரி சாவு
காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
பாணாவரம் அடுத்த கரடிகுப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கட்டிட மேஸ்திரி. நேற்று காவேரிப்பாக்கம் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார்.
முருகன் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
காவேரிப்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் முருகனை பிணமாக மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.