உள்ளூர் செய்திகள்
அமைச்சர் காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்த படம்.

உக்ரைன் நாட்டிலிருந்து ராணிப்பேட்டை திரும்பிய மாணவி

Published On 2022-03-07 15:23 IST   |   Update On 2022-03-07 15:23:00 IST
உக்ரைன் நாட்டிலிருந்து ராணிப்பேட்டை திரும்பிய மாணவி அமைச்சர் காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பூஜா மற்றும் சுபாஷ் ஆகிய 2 மாணவர்கள்  உக்ரைனில் தங்கி மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தனர். 

இந்த நிலையில் உக்ரைனில் ஏற்பட்ட போரில் சிக்கிய இருவரையும் மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாதுகாப்பாக தாயகம் திரும்பிய சுபாசும், பூஜாவும் அமைச்சர் ஆர்.காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து பேட்டியளித்த மாணவி பூஜா போர் பதட்டத்தில் இருந்த தங்களுக்கு தமிழக அமைச்சர் ஆர்.காந்தி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் அளித்து தைரியம் கூறினார். மேலும் தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

Similar News