உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேக விழா நடை பெற்ற போது எடுத்த படம்.

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2022-03-07 15:02 IST   |   Update On 2022-03-07 15:02:00 IST
கந்தர்வக்கோட்டையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சி மல்லிகை நத்தம்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட  செல்வ விநாயகர்  கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 தினங்களாக கோவில் எதிர்புறம் யாகசாலை  அமைத்து, 4 காலபூஜைகள்நடை பெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில்  புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோவிலின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. 

விழாவை முன்னிட்டு சுற்று வட்டார கிராமத்தை  சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி செல்வவிநாயகரை வழிபட்டனர்.  

விழாவிற்கான    ஏற்பாடுகளை   விழாக்குழுவினர் மற்றும்   மல்லிகைநத்தம் கிராம மக்கள்  செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் உத்தரவின் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையில்  போலீசார் செய்திருந்தனர்.

Similar News