உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வெள்ளகோவில் பகுதியில் கட்டுக்கட்டாக வைக்கோல்களை வாங்கி செல்லும் விவசாயிகள்

Published On 2022-03-07 06:22 GMT   |   Update On 2022-03-07 06:22 GMT
காங்கேயம், குண்டடம், ஊதியூர் பகுதி விவசாயிகள் நேரில் வந்து வைக்கோல் கட்டுகளை வாங்கி வேன்களில் கொண்டு செல்கின்றனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அடுத்த அக்கரைப்பாளையம் பகுதியில் நெற்கதிர் அறுவடை செய்தபின் வைக்கோல்களை கட்டாக கட்டி விற்கின்றனர்.

அமராவதி ஆற்றின் நீர்ப்பாசனம், ஊற்று நீர் மற்றும் கிணற்று நீரை பாசனத்துக்கு பயன்படுத்தி தற்போது இப்பகுதிகளில் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 

வைக்கோல்களை ரோட்டோவெட்டர் எந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து ரோலாக உருட்டி கட்டப்படுகிறது. இந்த வைக்கோல்களை விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக வாங்கிச் செல்கின்றனர்.

வைக்கோல் ஒரு கட்டு ரூ.160க்கு விற்கப்படுகிறது. காங்கேயம், குண்டடம், ஊதியூர் பகுதி விவசாயிகள் நேரில் வந்து வைக்கோல் கட்டுகளை வாங்கி வேன்களில் கொண்டு செல்கின்றனர்.
Tags:    

Similar News