உள்ளூர் செய்திகள்
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்.

மகளிர் தின விளையாட்டு போட்டிகள்

Published On 2022-03-06 13:56 IST   |   Update On 2022-03-06 13:56:00 IST
கந்தர்வகோட்டையில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான குடிநீர், 

தூய்மை பாரத இயக்கம், ஊட்டச்சத்து உணவு, பாலின பாகுபாடு ஆகிய தலைப்பில் கோலப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவை கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக்மழவராயர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். முன்னதாக, மாநில பயிற்றுனர் கருப்பையா வரவேற்புரையாற்றினார். 

விழாவில் கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணையர்கள் திலகவதி, காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், முரளி, சரண்யா, தேவி ஆகியோர் செய்திருந்தனர். 

முடிவில் வட்ட இயக்க மேலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Similar News