உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

Published On 2022-03-06 06:05 GMT   |   Update On 2022-03-06 06:05 GMT
செவித்திறன் குறைபாடுடைய 25 குழந்தைகள், பார்வைக்குறைபாடுடைய 19 குழந்தைகள் என மொத்தம் 260 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
உடுமலை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திழந்தைகளுக்கான மருத்துவ முகாம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  

முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அவ்வகையில் பெற்றோர் பலரும், உரிய ஆவணங்களுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்து, உரிய ஆலோசனைகளை அளித்தனர். மனவளர்ச்சி குன்றிய 33 குழந்தைகள், உடல் இயக்க குறைபாடுடைய 29 குழந்தைகள், செவித்திறன் குறைபாடுடைய 25 குழந்தைகள், பார்வைக் குறைபாடுடைய 19 குழந்தைகள் என மொத்தம் 260 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். '

அதன்படி  தேசிய அடையாள அட்டை 76 பேருக்கும், நலவாரிய அட்டை 36பேருக்கும், புதிய அடையாள அட்டை 54 பேருக்கும் வழங்கப்பட்டது.குடிமங்கலம், மடத்துக்குளம், தாராபுரம், மூலனூர் மற்றும் பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த தசை இயக்க பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, வட்டார மேற்பார்வையாளர் ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News