உள்ளூர் செய்திகள்
விக்கிரமராஜா

கடலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்- விக்கிரமராஜா பங்கேற்கிறார்

Published On 2022-03-05 15:53 IST   |   Update On 2022-03-05 15:53:00 IST
தமிழக வணிகர் விடியல் மாநாடு குறித்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நாளை (6 -ந் தேதி) காலை 10 மணிக்கு சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடலூர்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டலம் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து திருச்சியில் 39-வது வணிகர் தினம் தமிழக வணிகர் விடியல் மாநாடு குறித்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நாளை (6 -ந் தேதி) காலை 10 மணிக்கு சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்குகிறார். நகர தலைவர் ஜி.ஆர். துரைராஜ், நகர துணைத் தலைவர் பட்டேல், நகர பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்‌.

நகரச் செயலாளர் சீனிவாசன் வரவேற்கிறார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றுகிறார். இதில் சேதுராமன் புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிவசங்கர் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு, மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இதில் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன், நகர இணைச் செயலாளர் செல்ல பாண்டியன், வெங்கடேசன், பகுதி செயலாளர்கள் மாஸ்டர் பேக்கரி ராஜா, சன்பிரைட் பிரகாஷ், நிலா ஹோட்டல் தங்கராசு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் வீரப்பன் நன்றி கூறுகிறார்.

Similar News