உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சாலை விபத்தில் தலைமை ஆசிரியர் பலி

Published On 2022-03-05 15:19 IST   |   Update On 2022-03-05 15:19:00 IST
தலைமை ஆசிரியர் சாலை விபத்தில் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(வயது 46) இவர் ஆண்டிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

மேலும் இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இவருக்கு திருமணமாகி பிரகதாம்பாள் என்ற மனைவியும், அருளி (19), பாலபாரதி (13 )என்ற மகளும் உள்ளனர்.

இவர் சம்பவத்தன்று இரவு  நடுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் சக்திவேலை நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்த போது  பருக்கைவிடுதி-பகட்டுவான்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தில் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், உதவி ஆய்வாளர் அருணகிரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருந்துவமனைமக்கு பிரேத  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சக்திவேல் உறவினர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள் ."

Similar News