உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற காட்சி.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2022-03-05 15:11 IST   |   Update On 2022-03-05 15:11:00 IST
போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்ட அரசுப் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து புதுக்கோட்டையில் சி.ஐ.டி.யு சங்கத்தினர் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார்.

போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளார் எஸ்.இளங் கோவன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்பு மணவாளன்  ஆகியோர் பேசினர். கோரிக் கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் ஆர்.மணி மாறன், கே.கார்த்திக்கேயன், எஸ்.சாமிய அய்யா, என்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

Similar News