உள்ளூர் செய்திகள்
மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்
கந்தர்வக்கோட்டையில் மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமை தாங்கினார். முகாமில் மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவக்குமார், கந்தர்வகோட் டை வட்டாட்சியர் புவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கந்தர்வகோட்டை தாலுகாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பங்களை கொண்டு வந்து கொடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டனர்.