உள்ளூர் செய்திகள்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கருத்தரங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கருத்தரங்கம்

Published On 2022-03-05 13:59 IST   |   Update On 2022-03-05 13:59:00 IST
ஆலங்குடியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கருத்தரங்கம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சி கிராமம் தச்சன்கோரைப்பத்தை கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் திட்டம் காச நோய் மையம் கட்டமைப்பின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

கருத்தரங்கிற்கு  ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கசாமி ராஜாங்கம் தலைமை தாங்கினார். முகாமில் துணை இயக்குநர் சங்கரி கருத்து ஆலோசனைகள் வழங்கினார்.


கருத்தரங்கில் காசநோய் குறித்தும், காசநோய்க்கான அறிகுறிகள், காசநோய் கிருமி காற்றில் பரவும் விதம் குறித்தும், உடல் எடை குறைதல், அடிக்கடி தும்மல், விட்டு விட்டு காய்ச்சல், இருமல், பாதுகாப்பாக இருமும் முறைகள் குறித்தும்,

முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், குழந்தைகளையும் தாய் மார்களையும் டிபி கிருமி தாக்குவது குறித்தும் இதற்கு சத்தான உணவு உண்ணுவதன் அவசியம், உணவு முறைகள் குறித்தும், டிபி (எலும்புருக்கி) நோய்க்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்றும் பொது மக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும் நோய் குறித்தும், டிபி நோய் குணமடையும் விதம் குறித்தும் டிபி நோயாளிகளுக்கு சத்துப் பொருட்கள், ஆகாரத் தொகை அரசு மருத்துவ மனையில் வழங்கப்படுவது குறித்தும் சரியாக மருந்து உண்ணும் முறை கள் குறித்தும், ஆறு மாதத்தில் காசநோய் முற்றிலுமாக குணமடையும் வி தம் குறித்தும், டிபி பரவாமல் தடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவான கருத்துரை வழங்கினார்.

Similar News