உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆலங்குடியில் மாணவர்களுக்கு பல் மருத்துவமுகாம்

Published On 2022-03-05 13:55 IST   |   Update On 2022-03-05 13:55:00 IST
ஆலங்குடியில் மாணவர்ளுக்கு பல் மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் மருத்துவர் செந்தில் தலைமையில் 5 பேர் குழுவினர்  பல்பரிசோதனை செய்தனர்.  

முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்.கே.அடிகளார்,  சூசைராஜ் மற்றும்  மருத்துவர் செந்தில் ஆகியோர் பற்களை எவ்வாறு சுத்தமாக   வைத்திருக்க வேண்டும் என்றும்,  கிருமிகள் நம்மை தொற்றாத வண்ணம் காலையும் மாலையும் மறந் திடாமல் பல் துலக்கிட வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.


முகாமிற்கு மருத்துவர்கள்  செந்தில்ராஜ், ஆனந்தி, விஜயராஜா மற்றும் உதவியாளர்கள்  கௌ சல்யா, யமுனா, சங்கீதா ஆகியோர் சுமார் 950 மாணவ மாணவிகளின் பற்களை பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை எடுத்துரைத்தனர்.

Similar News