உள்ளூர் செய்திகள்
வனஜா சுந்தரவடிவேலு

தொரப்பாடி பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

Published On 2022-03-04 16:22 IST   |   Update On 2022-03-04 16:22:00 IST
தொரப்பாடி பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

இதில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் வனஜா சுந்தரவடிவேலு தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து  மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Similar News