உள்ளூர் செய்திகள்
கைது

சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடியை சேதப்படுத்தியவர் கைது

Published On 2022-03-04 16:02 IST   |   Update On 2022-03-04 16:02:00 IST
சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடியை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சே‌ஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாயவேல் மகன் தனவேல்(வயது41). இவர் அதே பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தினார்.

இது குறித்து தி.மு.க. கிளை செயலாளர் மணிகண்டன் புகார் செய்தார. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News