உள்ளூர் செய்திகள்
அமைச்சர்கள் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கிய போது எடுத்த படம்.

457 பயனாளிகளுக்கு ரூ.3.56 கோடி மதிப்பில் திருமண நிதியுதவிகள்

Published On 2022-03-04 15:30 IST   |   Update On 2022-03-04 15:30:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.3.56 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவிகள் 457 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட் டத்தில் ரூ.3.56 கோடி  மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 3,656 கிராம்  தங்கத்தையும் 457 பயனாளிகளுக்கு அமைச் சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, அரசின் தற்போதைய நிதி சுழலிலும் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட திருமண நிதியுதவி கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தி எதையும் தாங்கும் சுமைதாங்கியாக தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் சிறப்பான நலத் திட்டங்கள் தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நல் ஆதரவினை அளிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் மேம்பாட்டில் முன்னுரிமை அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல், நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதன் அடிப்படையில்¢ நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் மகளிர் அனைவரும் ஆதரவு அளித்தனர்.

இதுபோன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொடர்ந்து ஆதரவினை அளிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News