உள்ளூர் செய்திகள்
சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
புதுக்கோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில அளவில் நடை பெற்ற 40&ம் ஆண்டு ஜூனியர் சிலம்ப போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினர்.
இதில் 11 ம் வகுப்பு படிக்கும் அருண்ராஜ் என்ற மாண வர் 34 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றார். இதே போல் 65 கிலோ எடை பிரிவில் 12ம் வகுப்பு மாண வர் கோகுல்சந்தோஷ் 2ம் இடம் பிடித்து பரிசு பெற்றார்.
மாநில அளவில் நடை பெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கநிர்வாகிகள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.