உள்ளூர் செய்திகள்
அன்னவாசல் பேரூராட்சி, சாலை பொன்னம்மாள்

மோதல் பரபரப்புக்கு இடையே அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் தேர்வு

Published On 2022-03-04 11:10 IST   |   Update On 2022-03-04 16:33:00 IST
மறைமுக தேர்தலையொட்டி அதிமுக, திமுகவினர் இடையே நிகழ்ந்த மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அன்னவாசல் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் அதிமுக 
8 இடங்களையும் , திமுக 6 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.

இதையடுத்து பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. 

இந்நிலையில் தலைவர் தேர்வு குறித்து அதிமுக,திமுகவினர் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. 



இதனிடையே, மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Similar News