உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி மயான கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் பரவசம்
பண்ருட்டி மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும்விசேஷ பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பனப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம்மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதே போல இந்தாண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும்விசேஷ பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஆக்ரோஷமான அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி மயானத்திற்கு புறப்பட்டு சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காக அம்மன் வேடம் அணிந்து பக்தி பரவசத்துடன் ஆடிப்பாடி பம்பை உடுக்கை அடித்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சியில் பெண்கள் சாமி ஆடி அருள்வாக்கு சொன்னார்கள். இதில் அண்ணா கிராமம் அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான என்.டி. கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நல்லூர் பாளையம் விசுவ நாதன், முருகன், எம்.ஜி.ஆர். நகர் பூராமூர்த்தி, கோவிந்த கண்ணன், சண்முகம், ராமலிங்கம், ஞானதுரை மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்தனர். இதனை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டடது.