உள்ளூர் செய்திகள்
கூட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 7-ந்தேதி முதல் குறைதீர் கூட்டம்

Published On 2022-03-03 15:52 IST   |   Update On 2022-03-03 15:52:00 IST
பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் கூட்டத்திற்கு வரவேண்டும்.
கடலூர்:

கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது குறைந்து உள்ளதால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 7-ந்தேதி முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

வாராந்திர பொதுமக்கள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் புதிய இணையதள பதிவு நடைமுறையின் படி தங்களது மனுவில் ஆதார் அட்டை எண், செல்லிடை பேசி எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றை மனுவில் தவறாமல் பதிவு செய்து மனு செய்திட வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் கூட்டத்திற்கு வரவேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

Similar News