உள்ளூர் செய்திகள்
பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
பள்ளி கட்டிடத்தை இடித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019&ம்ஆண்டு மே மாதம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் அ.தி.மு.க. வை சேர்ந்த சரீப் அப்துல்லா என்கிற ஜிம். பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் சேதமாக இருப்பதாக கூறி இடித்து தள்ளிவிட்டார்.
கட்டிடத்தின் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும். இதுகுறித்து கல்வித்துறையில் எந்தவித அனுமதியும் பெற வில்லை எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் என்டோஸ்மென்ட் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். அதன்படி கோட்டை பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.