உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வீடு கட்டாமலேயே கணக்கு காட்டி ரூ.18 லட்சம் மோசடி

Published On 2022-03-03 15:36 IST   |   Update On 2022-03-03 15:36:00 IST
வீடு கட்டாமலேயே கணக்கு காட்டி ரூ.18 லட்சம் மோசடி சம்பவத்தில் 15 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.


இதையடுத்து புதுக்கோட்டை லஞ்சம் ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2014&2015&ம்  நிதியாண்டில் இந்திரா  நினைவு குடியிருப்புத் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கும் மற்றும் 2016&ம் ஆண்டு முதல் முதல் 2019&ம் ஆண்டு வரை, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டி முடித்ததாக ரூ.17.70 லட்சம் முறைகேடு நடத்திருப்பதும், இதில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக 2014&ம் ஆண்டு முதல் 2019&ம் ஆண்டு வரை கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், குளத்தூர் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி தலைவர் என 15 பேர் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த 15 பேரில், பதவி உயர்வு பெற்ற ஒருவர், திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (தேர்தல்),  மற்றொருவர் திருச்சி மாவட்ட ஊராட்சி செயலாளராகவும் தற்போது பணிபுரிகின்றனர்.  மேலும் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களிடம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News